பருவநிலைப் பற்றுச்சீட்டுகளை எவ்வாறு பெற்று செலவழிப்பது
உங்களுடைய பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் எவ்வாறு பெற்றுக்கொள்வது
-
go.gov.sg/cv-claim எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள். “Climate Vouchers” பொத்தானைச் சொடுக்குங்கள்.
-
“SingPass” கொண்டு பதிவுசெய்யுங்கள். ஒரு குடும்பத்தின் சார்பில் ஒருவர் மட்டுமே இதைச் செய்யவேண்டும்.
-
உங்களுடைய பருவநிலைப் பற்றுச்சீட்டுகள் குறித்த இணைப்பைக் குறுஞ்செய்திவழி பெற்றிடுங்கள். பற்றுச்சீட்டுகளைக் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள குறுஞ்செய்தியை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
Important
You will receive an SMS from gov.sg with the unique voucher link after you have claimed your Climate Vouchers at go.gov.sg/cv-claim (i.e. upon completing Steps 1 to 3).
The unique voucher link you receive should start with https://voucher.redeem.gov.sg/. Do not trust or click on any voucher links starting with unknown or other prefixes.
Do note that NEA, PUB and RedeemSG will never send any SMS asking for your personal information or banking details to claim your Climate Vouchers. If you receive such an SMS, do not click on the link or reply.
முக்கியம்
நீங்கள் go.gov.sg/cv-claim என்ற இணையப்பக்கத்திலிருந்து பருவநிலைப் நீங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் (அதாவது, படிநிலைகள் 1 முதல் 3 வரை நிறைவுசெய்த பின்னர்), gov.sg இடமிருந்து தனித்துவமான பற்றுச்சீட்டு இணைப்பைக் கொண்ட குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள்.
நீங்கள் பெறும் தனித்துவமான பற்றுச்சீட்டு இணைப்பு https://voucher.redeem.gov.sg/ என்று தொடங்குவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். வேறு முன்னொட்டுகளைக் கொண்டு தொடங்கும் எந்தவொரு பற்றுச்சீட்டு இணைப்புகளையும் நம்பாதீர்கள், சொடுக்காதீர்கள்.
உங்கள் பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதன் பொருட்டு, தேசிய சுற்றுப்புற அமைப்பு, பொதுப் பயனீட்டுக் கழகம், RedeemSG ஆகியவை உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கோரும் எந்தவொரு குறுஞ்செய்தியையும் அனுப்ப மாட்டார்கள்.
உங்களுடைய பருவநிலைப் பற்றுச்சீட்டுகளை எவ்வாறு செலவழிப்பது
-
செலவிட விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுங்கள். பிறகு, “Show Voucher” பொத்தானைச் சொடுக்குங்கள்.
-
காசாளரிடம் விரைவுத் தகவல் குறியீட்டைக் காட்டுங்கள்
மேல்விவரங்களுக்கு, அன்புகூர்ந்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பாருங்கள்.